டெங்கு காய்ச்சலுக்கு இளம் மருத்துவர் பலி!

கொல்கத்தா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 28 வயது மருத்துவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
டெங்கு காய்ச்சலுக்கு இளம் மருத்துவர் பலி!

கொல்கத்தா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்த 28 வயது மருத்துவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதையடுத்து, நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகின்றன. 

அதன்படி, மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்து ரத்தக்கசிவு ஏற்பட்டால் இளம் கண் மருத்துவர் டெபோடி சட்டோபாத்யாய் நேற்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து மாநிலத்தில் இந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் கண் மருத்துவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், மேலும் பல உறுப்புகள் செயலிழந்ததே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

உயிரிழந்த கண் மருத்துவர் தெற்கு கொல்கத்தாவின் கார்பா பகுதியில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com