கர்நாடகத்துக்கு மேலும் 5 துணை முதல்வர்களை நியமிக்க மாநில அரசு ஆலோசித்து வருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் ராயரெட்டி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் நடப்பாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில அரசுக்கு மொத்தம் 6 துணை முதல்வர்களை நியமிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்கு மாநில அமைச்சர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜ் ராயரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மேலும் 5 துணை முதல்வர்களை நியமிக்க மாநில அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
சிறந்த நிர்வாகத்திற்காக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா இந்த யோசனையை முன்வைத்ததாகவும் இதற்கு சக அமைச்சர்கள் பலரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா கூறியுள்ளார்.
தற்போது அதிகபட்சமாக ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்ளனர். உத்தரபிரதேசம், நாகாலாந்து,மேகாலயம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் உள்ளனர்.
இதையும் படிக்க | மாணவியின் இருசக்கர வாகனத்தில் பயணித்த ராகுல் காந்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.