கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வாராணசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் சா்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை ) அடிக்கல் நாட்டினார். 

News image
Updated On :23 செப்டம்பர் 2023, 12:02 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் சா்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை ) அடிக்கல் நாட்டினார். 

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வருகிறது. 

Story image

இந்நிலையில்கிரிக்கெட் மைதானத்துக்கான பணிகளைத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துறை அதிகாரிகள், பிசிசிஐ நிர்வாகிகள், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

Story image

விழாவில் 'நமோ' என்று பெயரிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை பிரதமர் மோடிக்கு சச்சின் டெண்டுல்கர் வழங்கினார். 

30 ஏக்கருக்கும் மேலான பரப்பளவில் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. சுமார் 30,000 பேர் இதில் அமர முடியும். கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட உள்ளது. திரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்களும் உடுக்கை வடிவலான மையப்பகுதியும் பிறை நிலா வடிவலான மேற்கூறையும் அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Story image

எல்&டி நிறுவனம் உருவாக்கும் இந்த மைதானம் இரண்டு ஆண்டுகளுக்குள்  பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.