பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவை ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட்டில் நடிகை, இசையமைப்பாளர், பாடகி எனப் பன்முகத் திறமை கொண்ட பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மியின் முக்கியத் தலைவர்களின் ஒருவரும், எம்பியுமான ராகவ் சத்தாவும், நீண்ட நாள்களாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவின.
இதனை உறுதி செய்யும் விதமாக தில்லியில் கடந்த மே மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகவ் சத்தா-பரினீதி சோப்ரா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமண புகைப்படங்களை பரினீதி சோப்ரா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.