மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்: பெரும் விபத்து தவிர்ப்பு!

உத்தரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி செவ்வாய்க்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.

News image
நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்
Updated On :27 செப்டம்பர் 2023, 4:28 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி செவ்வாய்க்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.

தில்லி புறநகர் பகுதியான ஷகுர்பஸ்தியில் இருந்து மதுரா ரயில் நிலையத்துக்கு நேற்றிரவு 10.48 மணியளவில் மின்சார ரயில்(04446) வந்துள்ளது. ரயில் நிலையத்தின் 2ஏ நடைமேடையில் நிறுத்த அனுமதிக்கப்பட்டது.

அப்போது நடைமேடை அருகே வந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மேலே ஏறி மின்கம்பத்தை இடித்து நின்றது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இரவு நேரம் என்பதால் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சேதமடைந்த நடைமேடை, மின்கம்பம் உள்ளிட்டவை சரிசெய்யும் பணியில் வடக்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், விபத்து குறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.