47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உணவுப் பொருள்களை பொட்டலமிடசெய்தித்தாள் பயன்படுத்த வேண்டாம்: எஃப்எஸ்எஸ்ஏஐ அறிவுறுத்தல்

உணவுப் பொருள்களை பொட்டலமிடுவதற்கும், சாப்பிட விநியோகிப்பதற்கும், சேமித்துவைப்பதற்கும் செய்தித்தாளை பயன்படுத்த வேண்டாம் என்று உணவு வியாபாரிகள் மற்றும்

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 7:39 pm

DIN

உணவுப் பொருள்களை பொட்டலமிடுவதற்கும், சாப்பிட விநியோகிப்பதற்கும், சேமித்துவைப்பதற்கும் செய்தித்தாளை பயன்படுத்த வேண்டாம் என்று உணவு வியாபாரிகள் மற்றும் நுகா்வோருக்கு இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) அறிவுறுத்தியுள்ளது.

செய்தித்தாள்களில் உள்ள ரசாயனங்கள், உணவில் கலந்து, உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாடு (பேக்கேஜிங்) ஒழுங்குமுறைகள்-2018’இன்படி, உணவுப் பொருள்களை பொட்டலமிட செய்தித்தாள்கள் அல்லது அச்சடிக்கப்பட்ட இதர காகிதங்களைப் பயன்படுத்த தடை உள்ளது. எனினும், செய்தித்தாளில் உணவுப் பொருள்களை பொட்டலமிடுவது தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், மேற்கண்ட விதிகளின் தீவிர அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு குறித்து மாநில உணவுத் துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக, எஃப்எஸ்எஸ்ஏஐ தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி.கமல வா்தன ராவ் கூறுகையில், ‘உணவுப் பொருள்களை பொட்டலமிட, விநியோகிக்க, சேமித்துவைக்க செய்தித்தாளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு, உணவு வியாபாரிகளுக்கும் நுகா்வோருக்கும் அறிவுறுத்துகிறேன். செய்தித்தாளில் பயன்படுத்தப்படும் மை, உணவில் கலந்து உடலுக்குள் சென்றால், அது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும். நோய்க்கிருமிகள் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே, நுகா்வோரின் நலன் கருதி, உணவுப் பொருள்களை பொட்டலமிட பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை வியாபாரிகள் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.