பிகாரில் ஆர்ஜேடி தலைவர் சுட்டுக்கொலை!
பிகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள மசூதன்பூர் தியாராவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஆர்ஜேடி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


பிகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள மசூதன்பூர் தியாராவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஆர்ஜேடி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நள்ளிரவு 1 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த ஆர்ஜேடி தலைவர் அனிருதா சௌத்ரியை மர்ம நபர்கள் தாக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் பாலியாவில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
படிக்க: அனிமல் படத்தின் டீசர் வெளியானது!
இவர் பாலியா தொகுதியில் ஆர்ஜேடி தலைவராக இருந்தவர். முன்னதாக புதன்கிழமை கயா மாவட்டத்தில் ராஷ்ட்ரீய லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரே வாரத்தில் இரண்டு தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...