புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் லிமிடெட், நாக்பூரில் சுமார் 109 ஏக்கர் நிலத்தை, குடியிருப்பு மனைகளாக மாற்றுவதற்கு கையகப்படுத்தியுள்ளது. சுமார் ரூ.200 கோடிக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
கோத்ரேஜ் பிராப்பர்டீஸ் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கௌரவ் பாண்டே இது குறித்து தெரிவித்ததாவது:
புதிய நிலத்தை கையகப்படுத்துவது நாக்பூரில் எங்கள் இருப்பை மேலும் அதிகரிக்கும். கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான கோத்ரெஜ் பிராப்பர்டீஸ், நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒன்றாகும். தற்போது தில்லி-என்.சி.ஆர், மும்பை, பெங்களூரு மற்றும் புனே சந்தைகளில் குடியிருப்பு திட்டங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்து வருகிறோம்.
நடப்பு நிதியாண்டில், விற்பனை முறையில், 14 சதவிகிதம் வளர்ச்சி கண்டு, 14 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதே வேளையில் 2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில், கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் விற்பனையானது ரூ.2,520 கோடியிலிருந்து 11 சதவீதம் குறைந்து ரூ.2,254 கோடியானது. நிதி செயல்திறனைப் பொறுத்தவரை, கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் ஜூன் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.45.55 கோடியிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து ரூ.124.94 கோடியாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.426.40 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,265.98 கோடியானது. சமீபத்தில், கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் லிமிடெட் வலுவான தேவையைத் தொடர்ந்து நொய்டாவில் உள்ள அதன் புதிய வீட்டுத் திட்டத்தில் கீழ் ரூ.2,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சுமார் 670 பிளாட்களை விற்றதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு உதவும் ரஷியா: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் இணைகிறார்கள்!

அண்ணா பல்கலை. மாணவா் சோ்க்கைக்கு லஞ்சம்: இருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து
நீட் தோ்வு - சாதக, பாதகங்கள், மாற்றுத் தீா்வுகள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



