ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமையும்: முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே

பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.  
ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமையும்: முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே

பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார். 
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் நடைபெற்ற பாதயாத்திரை நிறைவு விழாவில் இன்று பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் பாரதிய ஜனதா (பாஜக) ஆட்சி அமையப் போகிறது என்றும், மீண்டும் வளர்ச்சி ஏற்படும் என்றும் அவர் கூறினார். 
மேலும் நிறுத்தப்பட்ட திட்டங்களும் தொடங்கப்படும் என்று வசுந்தரா ராஜே உறுதியளித்தார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலப் பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைகிறது. 
இதையடுத்து இந்த 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தற்போதே தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com