மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதன்படி, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன்(செப். 30) நிறைவடைகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ. 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தபோது 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 2 ஆவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக கடந்த மே மாதம் 19 ஆம் தேதி ஆர்பிஐ அறிவித்தது.
2,000 ரூபாய் நோட்டுகளை எந்தவித படிவம் மற்றும் அடையாள அட்டையின்றி வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது.
இதையும் படிக்க | வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!
அதன்படி, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.
இந்த காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணமில்லை என்றும் ஆர்பிஐ கூறியுள்ளது. எனவே, ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நாளையுடன்(செப். 30) நிறைவடைகிறது.
அதனால் 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் இன்றும் நாளையும் வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.
செப்டம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.3.32 லட்சம் கோடி மதிப்பிலான 93 சதவிகித 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது.
இதையும் படிக்க | தமிழகம் - கர்நாடகம் இடையே பேருந்து சேவை முடங்கியது! பயணிகள் அவதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த படைப்புகளால் மலையாள ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பாக்யராஜ்: பினராயி விஜயன்

கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!






