25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக மாறினாலும் அமலுக்கு வர பல ஆண்டுகள் ஆகும்: ப.சிதம்பரம்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், யதார்த்தத்தில் அமலுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:33 am IST

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவா் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த மசோதா சட்டமாக மாறினாலும், யதார்த்தத்தில் அமலுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற  சிறப்புக் கூட்டத் தொடரில்,  நாரி சக்தி வந்தன் அதிநியம்(பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டம்) என்ற பெயரில் மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. 

இது மக்களவையில் 2 உறுப்பினர்கள் தவிர, இதர அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. மாநிலங்களவையில் எந்த எதிர்ப்புமின்றி ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவா் ஒப்புதலைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது ஒப்புதல் பெற்றவுடன் இந்த மசோதா சட்டமாகும்.

இந்த நிலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உதவும் இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர், துணைத் தலைவா் கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். 

இதையடுத்து, மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாகியுள்ளது என்று அரசு கூறியுள்ளது. இனி அரசமைப்பு 106 ஆவது திருத்தச் சட்டம் என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும்.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறினாலும், யதார்த்தத்தில் அமலுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 
கடந்த சில ஆண்டுகள் வரை அமல்படுத்த முடியாமல் இருந்த ஒரு சட்டத்தை கொண்டுவருவதால் என்ன பயன்? என கேள்வி எழுப்பியுள்ள சிதம்பரம், இந்த மசோதா சட்டமாக மாறியிருந்தாலும், ஆனால் 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கூட இந்த சட்டம் அமலுக்கு வராது.

நீர் நிரம்பி பாத்திரத்தில் நிலவின் ஒளி பிரதிபலிப்பது போன்ற, ஒரு மாயை தான் இந்த சட்டம் என விமர்சித்துள்ள சிதம்பரம், பலர் கூறியது போல, வரும் தேர்தல் நாடகத்திற்காக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.