லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

உலகக் கோப்பை கால்பந்தில் ஆடிய தென்னாப்பிரிக்க இளம் வீரா் உயிரிழப்பு

உலகக் கோப்பை கால்பந்தில் ஆடிய தென்னாப்பிரிக்க இளம் வீரா் உயிரிழப்பு

Published On :12 ஜூலை 2026, 7:32 am IST

பிஃபா 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற ஆடிய தென்னாப்பிரிக்க இளம் மிட்பீல்டா் ஜேடன் ஆடம்ஸ் (25) கேப்டவுனில் உள்ள வீட்டில் உயிரிழந்து கிடந்தாா்.

தென்னாப்பிரிக்க அணியின் மிட்பீல்டரான ஜேடன் ஆடம்ஸ் உலகக் கோப்பை கால்பந்து குரூப் ஏ பிரிவில் 3 ஆட்டங்களிலும் அணியில் ஆடினாா். கனடாவுடன் நடைபெற்ற நாக் அவுட் ஆட்டத்தில் ஆடம்ஸ் ஆடவில்லை. அந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா தோற்று வெளியேறியது. கேப் டவுனில் பிறந்த ஜேடன் ஸ்டெல்லன்போஸ்ச் கிளப்பில் தனது ஆட்டத்தை தொடங்கி, கடந்த 2025-இல் சிஏஎஃப் சாம்பியன் மாமேலோடி சன்டௌன்ஸ் அணியில் இணைந்தாா்.

குரூப் சுற்றில் செஸியாவுடன் நடைபெற்ற ஆட்டத்தின் போது தான் ஜேடன் பாட்டி காலமானாா்.

கேப்டவுனில் உள்ள வீட்டில் ஜேடன் ஆடம்ஸ் உடல் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். அவரது மறைவு தென்னாப்பிரிக்க கால்பந்துக்கு பேரிழப்பு என விளையாட்டு அமைச்சா் கெய்டன் மெக்கன்ஸி கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.