ஜப்பான் அணி பிரேசிலிடம் தோல்வியுற்று, 2026 கால்பந்து உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் இருந்து வெளியேறியது. இதனால், ரசிகர்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஜப்பான் - பிரேசில் அணி இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணிக்கு மோதின. ஹூஸ்டன் திடலில் தொடங்கிய இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது.
இந்தப் போட்டியின் 29ஆவது நிமிஷத்தில் ஜப்பானின் கைஷு சனோ 29ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். முதல் பாதியில் ஜப்பான் 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் 56ஆவது நிமிஷத்தில் காசேமிரோ கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்.
பின்னர், ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90+5ஆவது நிமிஷத்தில் கேப்ரியல் மார்டினெல்லி கோல் அடித்து 2-1 என பிரேசிலை முன்னிலைப் பெற வைத்தார். ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் செல்லுமென நினைக்கையில் கடைசி நேரத்தில் பிரேசில் வெற்றியைத் தட்டிப் பறித்தது.
இந்தப் போட்டிக்குப் பிறகு களத்திலேயே ஜப்பான் வீரர்கள், பயிற்சியாளர்கள் தங்கள் நாட்டு ரசிகர்களை நோக்கி தலைவணங்கி மன்னிப்பு கோரினார்கள்.

தலைவணங்கும் ஜப்பான் வீரர்கள். - படம்: ஏபி
இதுமட்டுமில்லாமல் இந்தத் தொடர் முழுவதும் போட்டிக்குப் பிறகு அவர்களே அந்தத் திடலை சுத்தம் செய்த காட்சிகளும் பெரிதும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

குப்பைகளைச் சேகரிக்கும் ஜப்பான் ரசிகர்கள். - படம்: ஏபி
Summary
Japan coach, players bow down to fans in apology as Brazil end World Cup dream
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிஃபாவின் வரலாறு... 1938-ல் இத்தாலி 2-வது முறை சாம்பியன்!

முதல் முறையாக... டிராவில் முடிந்த ஜப்பான் - ஸ்வீடன் போட்டி!

உலகக் கோப்பையின் 1000-ஆவது போட்டி: துனிசியாவை வெளியேற்றியது ஜப்பான்!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை; டிராவில் முடிந்த நெதர்லாந்து - ஜப்பான் ஆட்டம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI




