
இந்தியாவில் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனையகம் மும்பையில் இன்று திறக்கப்படுகிறது.
இந்தியாவுடான 25 ஆண்டு வர்த்தகத்தை கொண்டாடும் விதமாக பிரத்யேக விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனம் தொடங்குகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி புது தில்லியிலும் ஒரு விற்பனையகத்தை திறக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆப்பிள் விற்பனையகத்தில், பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்குவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் இந்தியாவில் முதல் ஆப்பிள் விற்பனையகத்தை இன்று திறந்து வைக்கிறார். இந்தியாவில் இரண்டு விற்பனையகத்தை திறப்பது, ஐபோன் தயாரிப்பாளரிடமிருந்து இந்திய சந்தையை நோக்கிய மிகுதித்தனமையை குறிக்கிறது.
இன்று காலை 11 மணிக்கு ஆப்பில் விற்பனையகம் மும்பையில் திறக்கப்படுகிறது.