
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
சுகாதார இயக்குநரகம் வெளியிட்ட தகவலில்,
இந்தாண்டு இதுவரை 51,832 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூனில் 5,9256 ஆக இருந்த பாதிப்பு, ஜூலையில் 43,854 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டாக்காவில் 1,168 பேர் உள்பட மொத்தம் 2,694 பேர் புதிதாக டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
படிக்க: ஆகஸ்ட் மாத பலன்கள் ( மேஷம் - கன்னி)
ஜூலை மாதத்தில் மட்டும் டெங்கு பாதித்து பலியானோர் எண்ணிக்கை 204ஆக உள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 251 ஆக பதவாகியுள்ளன.
இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 42,195 டெங்கு நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 2022-ல் மாநிலத்தில் 281 டெங்கு இறப்புகள் பதிவான நிலையில, டெங்கு பாதித்த 62,423 பேரில் 61,971 பேர் குணமடைந்தனர். கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 20,465 பாதிப்பும், 109 இறப்பும் பதிவானது.
டெங்கு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வங்கதேசத்தில் கொசுக்களின் இனப்பெருக்கத்தை சரிபார்க்கவும், அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படிக்க: ஆகஸ்ட் மாத பலன்கள் ( துலாம் - மீனம்)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...