மணிப்பூர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக நாடாளுமன்றம் நான்காவது வாரமாக முடங்கியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை மக்களவை கூடிய உடனே மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க | ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி
அதுபோல, மணிப்பூா் நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க முன்வராததைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றம் 13-வது நாளாக இன்று முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.