மக்களவையில் ராகுல் காந்தி!
தில்லி: எம்.பி. பதவி மீண்டும் கிடைத்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ராகுல் காந்தியின் இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மக்களவை செயலகம் தனது உத்தரவை திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்தது.
இதையும் படிக்க | மணிப்பூர் விவகாரம்: 4-வது வாரமாக நாடாளுமன்றம் முடங்கியது!
இந்நிலையில், மக்களவையில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்திக்கு, இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, மக்களவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.