சன்சத் டிவி திரையில் ராகுல் காந்தியை 14 நிமிடங்கள்தான் காட்டினர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ராகுல் காந்தியை சன்சத் டிவி முழுமையாக திரையில் காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 
சன்சத் டிவி திரையில் ராகுல் காந்தியை 14 நிமிடங்கள்தான் காட்டினர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ராகுல் காந்தியை சன்சத் டிவி முழுமையாக திரையில் காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் விவாதத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று(புதன்கிழமை) பிற்பகல் உரையாற்றினார். 

அப்போது மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசையும்  பிரதமர் மோடியையும் கடுமையாக சாட்டினார். 

இந்நிலையில் ராகுல் காந்தி மக்களவையில் பேசியபோது மத்திய அரசின் தொலைக்காட்சியான சன்சத் டிவியில் அவரை முழுமையாக திரையில் காட்டவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

'மக்களவையில் ராகுல் காந்தி இன்று பிற்பகல் 12.09 முதல் 12.46 மணி வரை 37 நிமிடங்கள் பேசினார். ஆனால், சன்சத் டிவி கேமரா, வெறும் 14 நிமிடங்கள் 37 நொடிகள் மட்டுமே அவரை திரையில் காட்டியது. அவர் பேசியதில் இது 40%க்கும்  குறைவான நேரம். 

மணிப்பூர் குறித்து 15 நிமிடம் 42 நொடிகள் ராகுல் காந்தி பேசிய நிலையில், அவைத் தலைவர் ஓம் பிர்லா 11 நிமிடங்கள் 8 நொடிகள் திரையில் காட்டப்பட்டுள்ளார். இது 71% நேரம். 

எதைப் பார்த்து பிரதமர் மோடி அரசு பயப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com