
மணிப்பூரில் தொடரும் வன்முறைகள் மனதுக்கு வேதனையளிப்பதாகவும், உடனடியாக மாநிலத்தில் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நடைபெறும் வன்முறை அங்கு நிலவும் பிரிவினைவாதம், வெறுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். கேரளத்துக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஜெயிலர் படம் பார்த்த கேரள முதல்வர் பினராயி விஜயன்!
அப்போது அவர் பேசியதாவது: அனைவரையும் ஒரே குடும்பமாக ஒருங்கிணைப்பது மிகவும் அவசியம். வன்முறை மூலம் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும். சோகம் மற்றும் கோபம் அவ்வளவு எளிதில் மறைந்து விடாது. பிரிவினைவாத அரசியல், வெறுப்பு மற்றும் கோபம் ஆகியவற்றைக் கொண்டு அரசியல் செய்தால் என்ன ஆகும் என எனக்கான பாடம் போல அமைந்துள்ளது என்றார்.
அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ராகுல் காந்திக்கு மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. மக்களவை உறுப்பினராக மீண்டும் பதவி வழங்கப்பட்ட பின் முதல்முறையாக ராகுல் காந்தி கேரளம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.