

கர்நாடகத்தில் லோக் ஆயுக்தா போலீஸார் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் 48 இடங்களில் உள்ள அரசு அதிகாரிகளின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை பெங்களூரு, பிதார், குடகு, சித்ரதுர்கா, தாவணகெரே மற்றும் பிற இடங்களில் அதிகாலை முதல் சோதனை நடந்து வருகிறது.
200-க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாநில தலைநகர் பெங்களூருவில், அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் தொடர்பாக லோக் ஆயுக்தா இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
லோக் ஆயுக்தா எஸ்பி சுரேஷ் பாபு தலைமையிலான குழுவினர் அதிகாலை 4 மணிக்கு சோதனையை தொடங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.