தில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்

வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததனர். 
தில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் காயம்
Updated on
1 min read

வடமேற்கு தில்லியின் பவானாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததனர். 

இந்த தீ விபத்து சம்பவம் புதன்கிழமை இரவு 10.56 மணியளவில் நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு 30 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பவானா தொழில்துறை பகுதியில் உள்ள செக்டார்-5ல் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

தொழிற்சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதன் காரணமாக சுவர் மற்றும் கேட் இடிந்து விழுந்தது. இந்த தீ விபத்தைக் கட்டுப்படுத்த சென்ற 6 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். 

காயமடைந்தவர்கள் மகரிஷி வால்மீகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com