
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விந்தியகிரி போர்க் கப்பலைத் தொடங்குவதற்காக கொல்கத்தாவுக்கு இன்று காலை வந்தடைந்தார்.
குடியரசுத் தலைவர் முர்முவை கொல்கத்தா விமான நிலையத்தில் மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் வரவேற்றார்.
கர்நாடகத்தில் உள்ள மலைத்தொடரில் பெயரால் அழைக்கப்பட்ட விந்தியகிரி திட்டம் 17A திட்டத்தின் ஆறாவது கப்பலாகும். இதனை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட்(GRSE)யில் குடியரசுத் தலைவர் முர்மு தொடங்கிவைக்க உள்ளார்.
படிக்க: புரி ஜெகந்நாதர் கோயிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு!
இந்த திட்டத்தின் முதல் ஐந்து கப்பல்கள் 2019 மற்றும் 2022 க்கு இடையில் MDL மற்றும் GRSE- ஆல் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முர்மு மேற்கு வங்கத்துக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...