திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கெணத்த காணோம் டிரைலர்!

கெணத்த காணோம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...

News image
Updated On :7 மார்ச் 2026, 5:26 pm IST

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் கெணத்த காணோம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இதில், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் பெற்றது.

கதையம்சமுள்ள இயக்குநர் எனப் பெயரெடுத்த சுரேஷ் சங்கையா, கல்லீரல் செயலிழப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2024-ல் உயிரிழந்தார்.

இறப்புக்கு முன், நடிகர் யோகி பாபுவை வைத்து ‘கெணத்த காணோம்’ என்கிற திரைப்படத்தையும் இயக்கி வந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஒரு ஊரில் கிணறு வெட்டும்போது நடக்கும் சம்பவங்களால் நிறைந்த கதையாக படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் உருவான இப்படம் மார்ச் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.