

3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரத்துக்கு பிறகு முதல்முறையாக மணிப்பூர் மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது.
பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடா்பாக பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
கடந்த மே மாதம் முதல் நீடித்து வரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஏராளமான மக்கள், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா்.
இந்த வன்முறை தொடா்பான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வன்முறையின்போது பழங்குடியின பெண்கள் இருவா் ஆடைகளின்றி இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு உள்பட 17 வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மணிப்பூா் கலவரம் தொடா்பான வழக்கு விசாரணையை அண்டை மாநிலமான அஸ்ஸாமுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதையும் படிக்க: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று கூடுகிறது!
இந்த நிலையில், பரபரப்பான சூழலில் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்று ஒரு நாள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. நடைபெற்று பெரும் மோதல் தொடர்பாக சில தீர்மானங்கள் கொண்டுவர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.