
ரக்ஷாபந்தனை கொண்டாடும் வகையில் தில்லியில் பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராகி கயிறு கட்டி கொண்டாடினர்.
இதுகுறித்து பிரதமர் மோடி அவர் டிவிட்டர் பக்கத்தில்,
அனைவருக்கும் ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள். சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி நேசத்தை உறுதிசெய்து சகோதரத்துவத்தைக் கொண்டாடுகிறார்கள்.
சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத பந்தத்தைக் கொண்டாட ரக்ஷா பந்தன் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.
படிக்க: இந்தியாவின் தலைவராக கேஜரிவால் இருக்க வேண்டும்: சொன்னது இவர்தான்!
இந்நிலையில் தில்லி பெண்கள் பள்ளியில் நடந்த ரக்ஷாபந்தன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது மாணவிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கிக் கட்டி அன்பை வெளிப்படுத்தினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...