அனுதாபம் தேவையில்லை.. போலியோ பாதித்த சாதனையாளரின் பேச்சு

ஒரு சாதாரண நபருக்குக் கிடைக்கும் அங்கீகாரம், மாற்றுத்திறனாளிகள் சாதிக்கும்போது கிடைப்பதில்லை என்கிறார் வசுந்தரா.
அனுதாபம் தேவையில்லை.. போலியோ பாதித்த சாதனையாளரின் பேச்சு
Updated on
2 min read


ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் அனந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 33 வயதாகும் வசுந்தரா கோப்புலா. தந்தை கைவிட, ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை வழிநடத்தும் தாயால் வளர்க்கப்பட்டவர்.

அப்போதுதான், அவர் மற்றுமொரு சோதனையை எதிர்கொண்டார். மிக இளம் வயதில் அவருக்கு திடிரென போலியோ தாக்க, அவரது உடலின் 80 சதவீதம் முடங்கி, உடல், எலும்பு, நரம்புகள் அவரை கைவிட்டன.

இது பற்றி அவர் கூறுகையில், எனது தாய்க்கு போதிய கல்வியறிவு இல்லாததால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதையே அவரால் அறிய முடியாமல் போனது. எனது தந்தை எங்களை கைவிட்டுவிட்டார். மருத்துவமனையை நாடிய போது, அது சரி படுத்துவதற்கான காலத்தைக் கடந்து விட்டதாகக் கூறிவிட்டார்கள்.

சாப்பிடவும் கழிப்பறைக்குச் செல்லவும் மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலை இருந்தது. பள்ளிக்கும் சென்றேன். அங்கு எனக்கு யாரும் உதவாததால் 8 மணி நேரம் கழிப்பறைக்குக் கூட செல்ல இயலாமல் தவிப்புடனே பாடம் படித்தேன். எனது குடும்பத்தினர் என்னை உற்சாகப்படுத்தினர். இன்று ஒரு தன்னம்பிக்கை மனிதராக உருவாகியுள்ளேன் என்கிறார்.

ஊடகத் துறையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் உள்ள ஊடகத்தில் பணியைத் தொடங்கியிருக்கிறார். பல அசௌகரியங்களை அவர் சந்தித்த போதும், மனிதர்களின் மனத் தடையே பெரும் சிக்கலாக தனக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். விளையாட்டில் வீரர்கள் வெற்றி பெற்றால் கொண்டாடுகிறார்கள். ஆனால், பாராலிம்பிக் மற்றும் பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டில் வெற்றிபெற்றால் யாரும் அதனை ரசிப்பதுகூட இல்லை.

இந்த சமூகத்தில், ஒரு சாதாரண நபருக்குக் கிடைக்கும் அங்கீகாரம், மாற்றுத்திறனாளிகள் சாதிக்கும்போது கிடைப்பதில்லை என்கிறார் வசுந்தரா.

மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம் என்பதை நான் அறிந்துகொண்டேன். எனவே, வேவ் மீடியா என்ற ஊடகம், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஊக்குவித்தது. எப்போது எந்த அதிகாரியையாவது நான் சந்திக்க நேர்ந்தால், நான் நன்கொடை கேட்பேனோ என்றுதான் பலரும் நினைப்பார்கள.

எனக்கு உங்களிடமிருந்து உற்சாகமும் ஆதரவும்தான் தேவையே தவிர, அனுதாபமோ, பரிதாபமோ அல்ல என்கிறார் வசுந்தரா.

அப்போதுதான், மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும்தான் தேவை, அனுதாபம் அல்ல என்று அறிந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அழகுப் போட்டி நடத்த முடிவு செய்தேன். இத்தகைய நிகழ்வுகள் ஊனமுற்ற நபர்களை ஊக்க நிலைக்கு கொண்டு வருகின்றன. நீங்கள் மேடையில் நடக்கும்போது, ​​நீங்கள் பெருமையுடன் நடப்பீர்கள். இது நம்பிக்கையைத் தருகிறது மற்றும் உடல் மீதான நம்பிக்கையை வளர்க்கிறது. அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை நான் அவர்களுக்கு வழங்கினேன்” என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக பல்வேறு சிறு குறு நிறுவனங்களுக்கும் அவர் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.  அவர் இதுபோன்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி காந்தாரி டால்க்ஸ் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. எனது வாழ்க்கையில் நான் சந்தித்த பிரச்னைகளைக் கூறி, அதற்கு எவ்வாறு தீர்வு கண்டேன் என்பதையும் இந்த நிகழ்ச்சியில் அவர் விளக்கி பலருக்கும் ஊக்கமளித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com