ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநில மக்களும் பாஜகவை ஆதரித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன.
இவற்றில் மிஸோரம் மாநிலத்திற்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.4) நடைபெறுகிறது. மற்ற நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச. 3) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | ராஜஸ்தானில் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்தது பாஜக
இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 55 தொகுதிகளிலும், 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 161 இடங்களிலும், ராஜஸ்தானில் 112 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இதனைக் குறிப்பிட்டு பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “மூன்று மாநிலங்களிலும் மக்கள் மோடியின் தலைமையிலான பாஜகவை ஆதரித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் போலி வாக்குறுதிகளை புறந்தள்ளி, மோடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | தெலங்கானா: காங்கிரஸ் -64, பிஆர்எஸ் - 43 இடங்களில் முன்னிலை
மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் பிரதமர் மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை தெளிவாகக் காட்டுகிறது. தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியின் முறைகேடுகளால் காங்கிரஸ் பலனடைந்துள்ளது. விரைவில் தெலங்கானாவிலும் பாஜக வளர்ச்சி அடையும்.” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேவைக்குள் அடங்கும் வாழ்க்கை!

டிரம்ப்பிடம் மத்திய அரசு அடிபணிந்து விட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு
பழனி கோயில் நில முறைகேடு விவகாரம்! சாா் பதிவாளா் மீது தேனியில் பதிவான வழக்கு விவரம் சிபிசிஐடி-யிடம் தாக்கல்

இன்றைய ராசி பலன்கள் (04.08.2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு?
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



