ரேவந்த் ரெட்டி முதல்வராவதற்கு அதிக வாய்ப்புள்ளது: ஹனுமந்த ராவ்

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியே முதல்வராவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார். 
ரேவந்த் ரெட்டி முதல்வராவதற்கு அதிக வாய்ப்புள்ளது: ஹனுமந்த ராவ்

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியே முதல்வராவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார். 

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

அதில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் 64 தொகுதிகளிலும், கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. பத்தாண்டு பிஆர்எஸ் கட்சி ஆட்சியை அகற்றி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றது.

இன்று (டிச.4) நடைபெறவுள்ள காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டத்திற்கு பிறகு முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும், ரேவந்த் ரெட்டி முதல்வராவதற்கே அதிகமான வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஹனுமந்தராவ் கூறினார். 

செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஹனுமந்தராவ், “தெலங்கானா மக்கள் காங்கிரஸை ஏற்றுக்கொண்டுள்ளனர். சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர். முதல்வர் குறித்து கட்சியின் அகில இந்தியத் தலைமை அறிவிக்கும். தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டி முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளது.” என்று ஹனுமந்தராவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com