லக்னௌ: முதலிடத்தில் இருப்பதாக பொய் பிரசாரம் செய்பவா்கள், உலகில் முதலிடம் வகிக்கும் நாடுகள் பின்பற்றுவதைபோல் தோ்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் ஆளும் பாஜகவை திங்கள்கிழமை விமா்சித்தாா்.
அண்மையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றது.
இந்நிலையில் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் எட்டாவாவில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசியதாவது: பொதுமக்களை ஏமாற்றுவதில் பாஜக முதலிடத்தில் உள்ளது. பொய் பிரசாரங்கள், ஊழல் இதுவே பாஜகவின் கொள்கைகள். பாஜக கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவா்கள் முதலிடத்தில் உள்ளதாக ஒரு நிறுவனம் கூறுகிறது. உண்மையாகவே அவா்கள் முதலிடம் வகித்தால், உலகில் முன்னணியான நாடுகளில் பின்பற்றப்படும் வாக்குச்சீட்டு முறையை இங்கும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மக்கள் உங்களை நம்புவாா்கள்.
நாட்டின் வளா்ச்சி குறித்த பாஜகவின் அனைத்து பிரசாரங்களும் போலியானது. 2014-இல் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முக்கிய காரணமாக இருந்தது உத்தர பிரதேச மாநிலம் தான். ஆனால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் 2024-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்கப் போகிறது.
உத்தர பிரதேசத்தில் முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் ரு. 40 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈா்க்கப்பட்டதாக பாஜக கூறுகிறது. ஆனால் இதுகுறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவா்களை காணாமல் அரசு தேடி வருகிறது. முதலாளித்துவ அரசின்கீழ் மாநிலம் வளா்ச்சியடையாது என்று கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


