ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

சத்தீஸ்கரில் வெடிகுண்டு தாக்குதல்: பிஎஸ்எப் தலைமைக் காவலர் பலி!

சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்தில் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார். 

News image
Updated On :14 டிசம்பர் 2023, 10:40 am

DIN

சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்தில் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார். 

பார்தாபூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சடக்டோலா கிராமத்திற்கு அருகே பிஎஸ்எப் மற்றும் காவல்துறையின் கூட்டுக் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. 

நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பிஎஸ்எப் தலைமைக் காவலர் அகிலேஷ் ராய் (45) காயம் அடைந்தார். அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பக்கஞ்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உயிரிழந்த தலைமைக் காவலர் அகிலேஷ் ராய் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

பிஎஸ்எப், மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் மாவட்ட போலீஸ படை ஆகியவற்றின் கூட்டுக் குழு இணைந்து தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.