பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான நடிகர் தேவன் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் அறிமுகமான தேவன், தென்னிந்திய மொழிகளிலேயே 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பிரதாப் படத்தில் அறிமுகமான இவர் ஜெய்ஹிந்த், பாட்ஷா, உல்லாசம், நெஞ்சினிலே, சிட்டிசன், ஏகன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள மக்கள் இயக்கம் என்கிற கட்சியைத் துவங்கி தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். பின், 2021 முதல் தன் கட்சியை கேரள மாநில பாஜகவுடன் இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிக்க: மக்களவைக்குள் அத்துமீறல்: மூளையாக இருந்து செயல்பட்டது யார்?
இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், கட்சியின் மாநில துணைத் தலைவராக தேவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்.
இருமுறை சட்டபேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட தேவன், இதுவரை எந்தத் தொகுதியிலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

