நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 8 பணியாளர்கள் பணியிடைநீக்கம் 

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக 8 பணியாளர்களை பணியிடைநீக்கம்  செய்து வியாழக்கிழமை மக்களவைச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 8 பணியாளர்கள் பணியிடைநீக்கம் 
Published on
Updated on
1 min read


புதுதில்லி: நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் தொடர்பாக 8 பணியாளர்களை பணியிடைநீக்கம்  செய்து வியாழக்கிழமை மக்களவைச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பயங்கரவாதத் தாக்குதலின் 22 ஆண்டு நிறைவையொட்டி,புதன்கிழமை நடந்த ஒரு பெரிய பாதுகாப்பு மீறலில், லக்னௌவைச் சோ்ந்த சாகா் சா்மா மற்றும் கா்நாடகத்தின் மைசூரைச் சோ்ந்த டி.மனோரஞ்சன் ஆகிய இருவர், பூஜ்ஜிய நேரத்தில் பாா்வையாளா் மாடத்தில் இருந்து பிற்பகல் 1.12 மணியளவில் மக்களவை அறைக்குள் குதித்து,சர்வாதிகாரம் கூடாது என்று முழக்கமிட்டவாறே அவைத் தலைவர் இருக்கையை நோக்கி விரைந்தவர்கள், அவைக்குள் குதித்து வண்ணப்புகைக் குப்பிகளை வீசியுள்ளனர். 

அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த அமோல் ஷிண்டே மற்றும் ஹரியாணாவைச் சோ்ந்த நீலம் தேவி ஆகிய இருவர், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே "சர்வாதிகாரம் கூடாது"  என்று முழக்கமிட்டவாறே இதேபோன்று வண்ணப்புகைக் புகைக் குப்பிகளை வீசி வீசியுள்ளனர். 

இந்த சம்பவத்தை திட்டமிட்ட 6 பேர் கொண்ட குழுவில் நால்வரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தில்லி காவல்துறை கடுமையான சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி)ஆகியவற்றின் தொடர்புடைய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் புதன்கிழமை நடந்த ஒரு பெரிய பாதுகாப்பு மீறலுக்கு பாதுகாப்பு குறைபாடு தான் காரணம் என தெரியவந்துள்ள நிலையில், இது தொடர்பாக 8 பணியாளர்களை இடைநீக்கம் செய்து வியாழக்கிழமை மக்களவைச் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ராம்பால், அரவிந்த், வீர் தாஸ், கணேஷ், அனில், பிரதீப், விமித் மற்றும் நரேந்திரன் என ஆகிய எட்டு பேர் என்பது தெரியவந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com