தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகாராஷ்டிரத்திலும் புதிய கரோனா திரிபு: ஒரே சிறந்த மருந்து இதுதான்!

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மகாராஷ்டிரத்திலும் ஒமைக்ரான் வகை கரோனாவின் புதிய திரிபு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 டிசம்பர் 2023, 6:13 am

DIN

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மகாராஷ்டிரத்திலும் ஒமைக்ரான் வகை கரோனாவின் புதிய திரிபு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை திரிபான ஜேஎன்.1 வகை கரோனா வைரஸ், மகாராஷ்டிரத்தில் பரவியிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தனஜி சவந்த் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும், எந்த நிலையையும் எதிர்கொள்ள மாநில சுகாதாரத் துறை தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் யாருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடி தேவையான மருத்துவ உதவியை பெறுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

கேரளத்திலும் ஜேஎன் 1 திரிபு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா சுகாதாரத் துறை அமைச்சர் தாமோதர ராஜா நரசிம்மா இது பற்றி பேசுகையில், மாநிலத்தில் ஆறு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இது பல மாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு பக்தர்கள் செல்லும் காலம் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனாவை வெல்லும் ஒரே சக்தியாக தற்போது முகக்கவசம்தான் உள்ளது. மக்கள் அதனைப் பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.