புது தில்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பான வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் நீதிமன்ற காவலை ஜன. 5 வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜாவை விசாரிக்கத் தில்லி காவல்துறை அவகாசம் கேட்டு அளித்த கோரிக்கையை ஏற்று காவலை நீடித்துள்ளார்.
லலித் ஜா, இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாகவும் ஒட்டுமொத்த சதி குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் காவலர்கள் கூறினர்.
முன்னதாக, வியாழக்கிழமை நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நால்வரின் காவலை ஜன.5 வரை நீடித்து உத்தரவிட்டது.
2001 பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்த அதே நாளில் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவர் பார்வையாளர் பகுதியில் இருந்து அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணக்குப்பிகளை வீசினர்.
அதே நேரத்தில் அமோல் ஷிண்டே மற்றும் நீலம் இருவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


