கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேஜஸ்வி யாதவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

பிகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஜனவரியில் 5-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. 

News image
தேஜஸ்வி யாதவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்
Updated On :23 டிசம்பர் 2023, 7:36 am

DIN

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பிகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஜனவரியில் 5-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. 

முன்னதாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிச.22-ஆம் தேதி தேஜஸ்வி யாதவையும், டிச.27-ஆம் தேதி லாலு பிரசாத்தையும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

ஆனால், தேஜஸ்வி யாதவ் டிச.22-ம் தேதி ஆஜராகாத நிலையில், ஜனவரி 5-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் சிலா் விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.