புது தில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 656 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஒட்டுமொத்தமாக 3,742 பேருக்குக் கரோனா செயல்பாட்டில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலை 8 மணி தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் இறந்த கரோனா நோயாளி ஒருவர் உள்பட இதுவரை நாடு முழுவதும் 5,33,333 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்த பாதிப்பு 4.50 கோடியாக அதிகரித்துள்ளது. நோயிலிருந்து குணமாகும் சதவிகிதம் 98.81 ஆக உள்ளது.
இதையும் படிக்க: விபரீதமாக மாறிய சச்சரவு: இளைஞர் பலி!
மத்திய அரசின் இணையத்தளத்தின் தகவல்படி 220.67 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.