மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஜம்மு- காஷ்மீரில் ஆயுதங்கள் பறிமுதல்

பூஞ்ச் பகுதியில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :29 டிசம்பர் 2023, 12:34 pm

ஜம்மு: ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களைப் பாதுகாப்பு படையினர் ஜம்முவில் உள்ள பூஞ்ச் பகுதியில் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு படையினர் அடிக்கடி அந்தப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்து மேற்கொண்ட சோதனையில் மூன்று துப்பாக்கிகள், தோட்டாக்கள் கொண்ட ஆறு மேகஸின்கள், நான்கு கையெறி குண்டுகள் மற்றும் 64 தோட்டா வரிசைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.