ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனம், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனைத் தங்களின் விளம்பர தூதராக அறிவித்துள்ளது.
2024-ல் ஹூண்டாய் புதிய க்ரெட்டா மாடல் காரை ஜன.16 அன்று அறிமுகம் செய்யவுள்ளது. அதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஷாருக் கான் ஏற்கெனவே இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக 20 ஆண்டுகளாக உள்ளார்.
நடுத்தர எஸ்யூவி வகை கார்களில் க்ரெட்டா அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷாருக் கானின் ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் முதன்முறையாக அறிமுகமாகியவர் தீபிகா படுகோன். பாலிவுட் முன்னணி நடிகையான தீபிகா மற்றும் ஷாருக்கின் ஜோடி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
திரைக்கு வெளியே கார் விளம்பரத்தில் இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
இதையும் படிக்க: என் காதலிக்கு பாதுகாப்பு வேண்டும்: நீதிமன்றத்தை நாடிய பெண்!
இவர்களைத் தவிர கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஹர்திக் பாண்டியாவும் இந்நிறுவனத்தில் விளம்பரத் தூதராக இணைந்துள்ளார்.