என் காதலிக்கு பாதுகாப்பு வேண்டும்: நீதிமன்றத்தை நாடிய பெண்!

தன்பாலின ஈர்ப்பாளரான மனுதாரர், தன் காதலியின் உயிருக்கு அவரது பெற்றோரால் ஆபத்து இருப்பதாகவும், அவரைப் பாதுகாக்குமாறும் கோரியுள்ளார்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த பெண், பெற்றோரால் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படும் தன் காதலியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

தன்பாலின ஈர்ப்பாளர்களான அந்த இரண்டு பெண்களும் காதலித்து வந்தது மனுதாரரின் காதலியின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரையும் பிரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் ஒன்றாக தில்லிக்கு சென்றுவிட்டதாகவும் அவரது காதலியின் பெற்றோர் தன் மேல் கடத்தல் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

புகார் அளித்த விஷயம் தெரியவந்ததும் இருவரும் காவல்நிலையத்திற்குச் சென்று தங்கள் நிலைமையை தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த காவல்நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டதாக மனுதாரர் கூறியுள்ளார்.

தன் காதலியின் உறவினர்கள் முன்னிலையில் இந்த வன்முறைச் சம்பவம் நடந்ததாகத் தெரிவித்துள்ளார். அதன்பின் தன் காதலி உத்தரப்பிரதேசத்திற்கு அவரது குடும்பத்தால் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து குடும்பத்திற்குத் தெரியாமல் அவரது காதலி தொலைபேசியில் பேசியதாகவும், அங்கு அவர் உயிருக்கே ஆபத்து நேரலாம் எனவும் அவர் தெரிவித்தகாக மனுதாரர் கூறியுள்ளார். 

இந்தப் பிரச்னையை முக்கியமானதாகக் கருதிய உயர் நீதிமன்றம், மனுதாரரின் காதலியை அடுத்த விசாரணைக்கு ஆஜர் படுத்துமாரு சண்டிமந்திர் காவல்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com