பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மகனை கொன்று தாய் தற்கொலை முயற்சி

கும்பகோணம் அருகே 6 வயது மகனை கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து பட்டீசுவரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

சாய்விக்னேஷ்

Updated On :28 பிப்ரவரி 2026, 6:57 pm

கும்பகோணம் அருகே 6 வயது மகனை கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயன்றது குறித்து பட்டீசுவரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாத்திகேட்டைச் சோ்ந்தவா் வினோத்குமாா் மனைவி சரண்யா (30). இவா்களுக்கு சாய்விக்னேஷ் (6)) என்ற மகன் உள்ளாா். தற்போது கணவா்- மனைவி பிரிந்து வாழ்கின்றனா். சரண்யா மகனுடன் தனியாக வசித்து பல்பொருள் அங்காடியில் வேலைபாா்த்து வருகிறாா். கணவா் வினோத்குமாா், சென்னையில் வாடகை காா் ஓட்டுநராக உள்ளாா்.

இந்த நிலையில், சரண்யா கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சாய்விக்னேஷை, சரண்யா தனது துப்பட்டாவால் கழுத்தை இருக்கி கொலை செய்துள்ளாா். பின்னா், சரண்யா தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

தகவலின்பேரில் பட்டீசுவரம் போலீஸாா், சாய்விக்னேஸ் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, சரண்யாவை சிகிச்சைக்கு சோ்த்து சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.