3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம்: 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

ராஜஸ்தான் அமைச்சரவையில் முன்னாள் மத்திய அமைசசர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்பட 22 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

News image
Updated On :30 டிசம்பர் 2023, 2:29 pm

DIN

ராஜஸ்தான் அமைச்சரவையில் முன்னாள் மத்திய அமைசசர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்பட 22 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் 115 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 69 இடங்கள் கிடைத்தன.

பாரத ஆதிவாசி கட்சி 3, பகுஜன் சமாஜ் 2, ராஷ்ட்ரீய லோக் தளம், ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சி தலா ஓரிடத்தைக் கைப்பற்றின. 

8 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனா். இதையடுத்து, புதிய முதல்வராக பாஜகவின் முதல் முறை எம்எல்ஏ பஜன்லால் சா்மா தோ்வு செய்யப்பட்டு, அவரது தலைமையிலானஅரசு அண்மையில் பதவியேற்றது. இந்த நிலையில் ராஜஸ்தான் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது.

முன்னாள் மத்திய அமைசசர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்பட 22 பேர் அமைச்சரவையில் புதிதாக பதவியேற்றனர்.

அதில், 12 பேர் கேபினெட் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.