தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து (ஜன.1)நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. 

News image

கோப்புப் படம்.

Updated On :31 டிசம்பர் 2023, 3:55 am

DIN

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து (ஜன.1)நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. 

எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு பிஎஸ்எல்வி சி58 விண்ணில் ஏவப்படுகிறது. விண்ணில் உள்ள தூசு, நிறமாலை, வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலாவை எக்ஸ்போ சாட் ஆராய உள்ளது. திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது. 

மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க உள்ளது.

இதனிடையே பழவேற்காடு மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் ஏவப்படவுள்ள நிலையில் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.