நாடாளுமன்ற விவாதத்திலிருந்து எதிர்க்கட்சிகள் நழுவுகின்றன: மத்திய அமைச்சர்

அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், மக்களுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்திலிருந்து எதிர்க்கட்சிகள் நழுவுகின்றன: மத்திய அமைச்சர்

அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், மக்களுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான ஆலோசனையில் ஈடுபடாமல் அவரை எதிர்க்கட்சிகள் அவமதித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தலைமையகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் மத்திய அமைச்சர்  அனுராக் சிங் தாக்குர் பேசியதாவது: எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரை மீதான நன்றி செலுத்தும் தீர்மானத்தை அவமதித்து வருகின்றன. அதற்காக அவர்கள் குடியரத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். குடியரசுத் தலைவர் உரையின் மீதும், மக்களுக்கான இந்த 2023-24 மத்திய பட்ஜெட் மீதும் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபடாமல் நழுவி வருகின்றன என்றார்.

அதானி குழுமத்தின் மீது சுதந்திரமான விசாரணை வேண்டும் எனவும், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக அதன் செயல்பாடுகள் முடங்கின. அமளியில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இந்த சூழலில், அதானி குழுமத்தின் மீது விசாரணை நடத்தக் கோரி எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கிகளின் முன்பு நாளை மறுநாள் (பிப்ரவரி 6) நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com