இப்படியெல்லாம்கூட பெயர்கள் இருக்குமா, என்ன?

கவர்ன்மென்ட், ஆப்பிள், ஆபிஸ், இங்கிலிஷ், பிரிட்டிஷ், சைக்கிள், ஃபாரஸ்ட், ரேஞ்ச் போலீஸ், கோர்ட், எக்ஸ்பிரஸ், காம்பவுண்ட்.... இதெல்லாம் என்ன  தெரியுமா? 
இப்படியெல்லாம்கூட பெயர்கள் இருக்குமா, என்ன?

கவர்ன்மென்ட், ஆப்பிள், ஆபிஸ், இங்கிலிஷ், பிரிட்டிஷ், சைக்கிள், ஃபாரஸ்ட், ரேஞ்ச் போலீஸ், கோர்ட், எக்ஸ்பிரஸ், காம்பவுண்ட்.. இதெல்லாம் என்ன தெரியுமா? கர்நாடகத்தில் தார்வாட் அருகே உள்ள பத்ராபூர் என்ற கிராமத்தில் உள்ள மக்களின் பெயர்கள்தான் இவை.

இங்குள்ள 'ஹக்கி பிக்கி' என்ற பழங்குடி சமூகத்தினர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளையும், வக்ரிபூலி (குஜராத்தியைப் போல) பேசக் கூடியவர்கள். 

இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் நிகழ்வுகளுடன் தொடர்புடைய பெயரையே குழந்தைகளுக்குச் சூட்டுகின்றனர். 

வெளி உலகம் அறியாத இவர்கள் தங்கள் குழந்தைகள் பிறந்த தருணத்தில் நேர்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் பெயர் வைக்கின்றனர். 

உதாரணமாக, எக்ஸ்பிரஸ் வாகனத்தில் பயணித்தால், அவர்களுக்கு ‘எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்டப்படும். ஆங்கிலேயர்கள் ஆண்டபோது பிறந்த ஒருவருக்கு 'பிரிட்டிஷ்' என பெயர் வைத்துள்ளனர். 

பெண்களுக்கு அமெரிக்கா, ஜப்பான், பஞ்சாப், பாம்பே, சைக்கிள் ராணி, மோட்டார் ராணி, மைசூர் பாக் என்ற பெயர்கள் அங்கு வழக்கத்தில் உள்ளன. 

சமூக வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையிலும் சப் - இன்ஸ்பெக்டர், கலெக்டர் , சுபேதார் என்றெல்லாம் பெயரிட்டுள்ளனர். வேட்டையாடச் சென்றபோது ஏதாவது விலங்குகளைப் பார்த்தால் அதன் பெயரையும் சூட்டிவிடுவார்களாம். 

காலப்போக்கில் கொஞ்சம் நிலைமை மாறி, தற்போது புதிய தலைமுறை வழக்கமான பெயர்களை ஏற்கத் தொடங்கியதால் இந்த நடைமுறை லேசாகக் குறைந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com