மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களை நாடு எப்போதும் நினைவுகூறும்' - ராகுல் காந்தி

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை  இந்தியா எப்போதும் நினைவு கூறும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

News image
Updated On :14 பிப்ரவரி 2023, 6:44 am

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை  இந்தியா எப்போதும் நினைவு கூறும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 40 சி.ஆர்.பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். 

புல்வாமா தாக்குதல் தினத்தையொட்டி பலரும் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி. அவர்களது அவரது உன்னத தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூறும்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக அவர்  புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

पुलवामा आतंकी हमले के वीर शहीदों को भावपूर्ण श्रद्धांजलि।

उनका सर्वोच्च बलिदान भारत हमेशा याद करेगा। pic.twitter.com/a39Gpzuq2u— Rahul Gandhi (@RahulGandhi) February 14, 2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.