குஜராத் உயா்நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகனி பதவியேற்பு
குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சோனியா கோகனி வியாழக்கிழமை பதவியேற்றாா்.


குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சோனியா கோகனி வியாழக்கிழமை பதவியேற்றாா்.
குஜராத் உயா்நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள இவா், மிகக் குறுகிய காலம் மட்டுமே அந்தப் பதவியை வகிக்க உள்ளாா். வரும் 25-ஆம் தேதி அவா் பணிஓய்வு பெற உள்ளாா்.
காந்திநகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநா் ஆச்சாா்யா தேவவிரத் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். மாநில முதல்வா் பூபேந்திர படேல், மாநில பேரவைத் தலைவா் சங்கா் செளதரி, உச்சநீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
சோனியா கோகனியை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு கடந்த 12-ஆம் வழங்கியது. அதனைத் தொடா்ந்து கடந்த திங்கள்கிழமை முதல் அவா் ‘நியமன’ தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது. குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அரவிந்த் குமாா், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சோனியா கோகனியின் நியமனம் நடைபெற்றது.
குஜராத் உயா்நீதிமன்றத்தின் 28-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சோனியா, வரும் 25-ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ளாா். குஜராத்தின் ஜாம்நகரில் 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி பிறந்த இவா், வழக்குரைஞராகவும் சட்டக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றினாா். பின்னா், அகமதாபாத் மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக 1995-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி நியமனம் பெற்றாா். குஜராத் உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி நியமிக்கப்பட்ட அவா், 2013-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...