ஐ-போன் வாங்கப் பணமில்லாததால் டெலிவரி பாயைக் குத்திக்கொன்ற இளைஞர்!
கர்நாடகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐ-போன் கொடுக்க சென்ற டெலிவரி பாயை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐ-போன் கொடுக்க சென்ற டெலிவரி பாயை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அஞ்சேகொப்பலு ரயில் நிலையம் அருகே பாதி எரிந்த நிலையில் இளைஞரின் உடல் கைப்பற்றப்பட்டது. உடலை போலீஸார் பிரேதப் பரிசோதனை அனுப்பிவைத்து, கொலை செய்யப்பட்டவர் குறித்து விசாரித்து வந்தனர்.
அதில் இறந்தவர் ஹேமந்த் நாயக்(20) என்று தெரிய வந்தது. இவர் ஆன்லைன் ஆர்டர்களை வீடு வீடாக டெலிவரி செய்யும் வேலையைச் செய்துவந்தார். கடைசியாக கடந்த பிப்.7-ம் தேதி வேலைக்குச் சென்றார். ஆனால் வீடு திரும்பாததால் அவரது சகோதரர் மஞ்சு நாயக் போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீஸார். அவர் கடைசியாக விலையுயர்ந்த ஐ-போனை லட்சுமிபூரைச் சேர்ந்த ஹேமந்த் தத்தா என்பவருக்கு டெலிவரி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஹேமந்த் தத்தாவை பிடித்து விசாரித்ததில், நாயக்கைக் கொன்றது ஒப்புக்கொண்டார். ஐபோனை திறந்துகாட்டும்படி கேட்டுள்ளார் ஹேமந்த். முடியாது என மறுத்த நாயக் பணம் கொடுங்கள் நான் செல்ல வேண்டும் என்று சொல்லிருக்கிறார்.
பணம் கொண்டு வருவதாக உள்ளே சென்ற ஹேமந்த், நாயக்கை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்றுள்ளார். பின்னர், அவரது உடலை தன் வீட்டில் இரண்டு நாள்களாக மறைத்து வைத்துள்ளார். வீட்டில் துர்நாற்றம் எழுந்ததையடுத்து பிப்.11-ம் தேதி சாக்கு மூட்டையில் நாயக்கின் உடலை எடுத்துச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
ஐ-போன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரி பாயை கொலை செய்து, போனை அபகரித்ததாக அவர் ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...