

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 134 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,78,956 ஆக உள்ளது.
நாட்டில் ஒரேநாளில் 222 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,45,667 ஆக அதிகரித்துள்ளது, மீட்பு விகிதம் 98.80 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,582 ஆகக் குறைந்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2020 ஆகஸ்ட் 7 இல் 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 இல் 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 இல் 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 இல் 50 லட்சத்தையும் தாண்டியது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,51,186 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.