உ.பி.யில்  நுழையும் ராகுல் காந்தியின் நடைப்பயணம்! 

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று  உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடங்கவுள்ளது.
உ.பி.யில்  நுழையும் ராகுல் காந்தியின் நடைப்பயணம்! 

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று  உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடங்கவுள்ளது.

கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் முதல் தில்லியின் செங்கோட்டை வரை 3,122 கிமீ தொலைவுக்கு நடைப்பயணம் நடைபெற்றுள்ளது. இந்த நடைப்பயணம் தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜன.3) மீண்டும் தொடங்குகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லியை அடைந்துள்ளது.

புத்தாண்டு ஓய்வுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்கும் நடைப்பயணம் உத்தரப் பிரதேச மாநிலம் வழியாக பஞ்சாபை கடந்து காஷ்மீர் சென்றடைகிறது.

முன்னதாக, உத்தர பிரதேசத்தில் நடைபெறும் நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்து. அழைப்புக்கு நன்றி தெரிவித்த அவா் நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தாா். 

இருப்பினும், அவா் நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டாா் என சமாஜவாதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீரில் ஜன.20-இல் நுழையும் நடைப்பயணத்தை ஸ்ரீநகரில் ஜன.30-ஆம் தேதி தேசிய கொடியேற்றி ராகுல் காந்தி நிறைவு செய்கிறாா்.

இந்த நடைப்பயணம், தென் மாநிலங்கள், பஞ்சாப், ஹரியாணா, ம.பி., ஹிமாசல், உ.பி. உள்ளிட்ட மாநிலங்கள் வழியே நடைபெற்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com