வரதட்சிணை! கார் கொடுக்காததால் திருமணத்தை நிறுத்திய பேராசிரியர்!

வரதட்சிணையால் நாட்டில் பல இளம் பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம் நடப்பதில்லை. திருமணமான இளம் பெண்களும் வரதட்சிணைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 
வரதட்சிணை! கார் கொடுக்காததால் திருமணத்தை நிறுத்திய பேராசிரியர்!
Published on
Updated on
1 min read


உத்தரப் பிரதேசத்தில் வரதட்சிணையாக கேட்டிருந்த காருக்கு பதிலாக வேறு கார் கொடுத்ததால், பேராசிரியர் ஒருவர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பேராசிரியர் ஒருவர், விரும்பிய கார் கொடுக்காததால் திருமணத்தை நிறுத்துவது பேசுபொருளாகியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் விஹார். இவர் அப்பகுதியிலுள்ள அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்காக வரதட்சிணையாக டொயோட்டா நிறுவனத்தைச் சேர்ந்த ஃபார்சுனர் காரை கேட்டுள்ளார். ஆனால் மணமகள் வீட்டிலிருந்து மாருதி சுசூகியின் வேகன்-ஆர் காரை பரிசாக கொடுக்க பதிவு செய்திருந்தனர். இதனால் அக்டோபர் 10ஆம் தேதி வேகன்-ஆர் காரை வரதட்சிணையாக கொடுக்க பதிவு செய்திருந்தனர்.

இதனை அறிந்த மணமகன் வீட்டார் காரை மாற்றி ஆர்டர் செய்யுமாறு மணமகள் வீட்டாரிடம் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், மணமகள் வீட்டார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையறிந்த கல்லூரி பேராசிரியர் திருமணத்தை நிறுத்துமாறு நவம்பர் 23ஆம் தேதி மணமகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து மணமகன் மீது வரதட்சிணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரதட்சிணையால் நாட்டில் பல இளம் பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம் நடப்பதில்லை. திருமணமான இளம் பெண்களும் வரதட்சிணைக் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். 

மாணவர்களுக்கு கல்வி நிலையங்களில் வழிகாட்டியாக இருக்க வேண்டிய கல்லூரி பேராசிரியர் ஒருவர், கார் கொடுக்காததால் திருமணத்தை நிறுத்துவதா? என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com